சனி, 30 ஜூன், 2012

தளத்திற்கு சென்றேன்

சென்றவாரம் தற்செயலாக open reading room  தளத்திற்கு சென்றேன், மிகவும் சிறந்த கதைகள் pdf ஆக உள்ளதுமுடிந்தாள் படிக ? விளம்பரகள் சில நன்றாக உள்ளது, காம்ப்ளன் , ஏன் சென்ட் விளம்பரகள் கேவலமாகஉள்ளது, 

செவ்வாய், 26 ஜூன், 2012

நண்பர்கள் வாழ்க!!!!

எனது முதல் கருத்துரை எழுதி ஒரு மாதம் வரை யாரும் பார்கவில்லை, facebookல்      
எழுதியதும், 10 நண்பர்கள் பர்த்திருகிரர்கள் (படித்தார்களா ??)
2 அமெரிக்க நண்பர்கள்வேறு  (பைய புள்ள நல்லா இருகணும் )
நண்பர்கள் வாழ்க!!!!
facebook வாழ்க!!!!

ஞாயிறு, 17 ஜூன், 2012

முதல் முயற்ச்சி

அன்புள்ள வாசகர்களுக்கு இது யன்னுடைய முதல் முயற்ச்சி, தவறாக இருப்பின்    மன்னிக்கவும்,

கடந்த சுமார் 20 வருடமாக எழுதவேண்டும்  என்பது எனது அசை, குயில் தோப்பு பெயர் யப்படி, உருவகிநேன் என்பது ஞாபகம் வரவில்லை 6மாதம் ஆனது , அடுத்த முயற்சி, இனி

OMR அல்லது corporate ஆபீஸ் செல்பவர்கள் கவனிக்கலாம், டீ கடையில் tag மாட்டியபடி it people நிற்பார்கள், எனக்கு சந்தேகம் நண்பனிடம் கேட்டேன்

மாப்பள உள்ள வேலை இல்லை அதனால முதல் 10 பேர 10மணிக்கு டீ சாப்பிட அனுப்புவாங்க அடுத்த 10 பேர 11மணிக்கு போண்டா சாப்பிட அனுப்புவாங்க அடுத்த 10 பேர 12மணிக்கு சாப்பாடு க்கு, இப்படியா எலோர்யம் ???

சனி, 16 ஜூன், 2012

பிரமிப்பு அடங்கவில்லை


இன்றைக்கு என் பெண் தனது ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் முடித்துக் கொண்டு மைசூர் எக்ஸ்பிரசில் வந்தாள்

அவளை ஸ்டேஷனில் இருந்து அழைத்துக் கொண்டு வருவதற்காக காலை ஆறுமணிக்கெல்லாம் ஸ்கூட்டரில் நானும் என் மனைவியும்

கிளம்பினோம். நல்ல பணி. ஹிகின்பாதம்ஸ் சமீபத்தில், அந்த கணத்துக்காக காத்திருந்தாற் போல பின் சக்கர ட்யூபின் மௌத் படீரென

விட்டது. வண்டி நிலை தடுமாறி பூம்புகார் தாண்டி இடப்புறம் ப்ளாட்பாரம் ஒட்டி நிறுத்தினேன். வந்த ஆட்டோவை வழி மறித்து நிறுத்தி

மனைவியை சென்ட்ரலுக்கு அனுப்பி விட்டு, பஞ்சர் ஒட்டும் வழியினை யோசித்தேன்

அந்த வயதானவர் அழைத்தார், " தம்பி பக்கத்துல பஞ்சர் கடை இருக்கு . நீங்க இங்கேயே இருங்க நான் போய் அந்தாளை கூட்டிட்டு வரேன்"

மூடப்பட்ட கடையொன்றின் வாசல்படி பளபளப்பான மொசைக்கில் இருந்தது.உட்கார்ந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது
படிக்கலாம் என எடுத்துப் போன 'தாயர் சன்னதி' பிரித்தேன்.

அந்தப் பெரியவர் திரும்ப வந்து விட்டார், ' அந்தப் பையன் இப்பதான் கடை திறந்திட்டு இருக்கான். சொல்லிட்டு வந்திருக்கேன். இப்ப
வந்துருவான்.. டீ சாப்பிடறீங்களா"

பர்ஸ் பிரித்து பணம் எடுத்துக் கொடுத்து, 'நீங்களும் டீ சாப்பிடுங்க"

இரண்டு பேப்பர் கப்பில் டீ வாங்கி வந்தார். "அது என்னங்க புத்தகம்" . அவரிடம் புத்தகம் தந்தேன்.

'இவரு திருநெல்வேலிக் காரரா'

"எப்படி சொல்றீங்க"

'அவங்க தான் திருநவேலி னு சொல்வாங்க.. இந்தியாவிலே முதல் முதலா கொடும்பாவி எரிச்சது யார் தெரியுமா"

இப்போது பஞ்சர் கடைப் பையன் பின் சக்கரத்தைக் கழற்றிக் கொண்டிருந்தான்

'நீங்க சொல்லுங்க"

'அக்பர் சக்ரவர்த்தி தான். மதன் எழுதின வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலே கிட்டத்தட்ட நடுவிலே படம் கூட வரைஞ்சிருக்கும்..நீங்க
படிச்சிருக்கீங்களா

இப்படித் தொடங்கி, அக்பரைப் பற்றி இன்னும் ஏராளமான விபரங்களைச் சொல்லிக் கொண்டே , அதைத் தொடர்ந்து கபாலீசுவரர் கோவிலுக்கு நிலப் பட்டா, தீன் இலாஹி, தன்னுடைய சௌதி பயணம், மெக்கா மசூதி வரலாறு, அங்கே பாலைவனம் எப்படி யாத்திரிகர்களுக்கு இடைஞ்சல், அங்கே இருக்கும் பேரிச்சைக்கும் இங்கே இந்திய பேரிச்சைக்கும் இருக்கும் வித்தியாசம் , பாலஸ்தீன வரலாற்றினை பா. ரா அவர்களின் நிலமெல்லாம் ரத்தத்திலிருந்து மேற்கோள், தேசிங்கு ராஜன் சம்பந்தமாக கன்னிமரா பழைய லைப்ரரியில் இருக்கும் இரண்டு புத்தகங்கள்.. மீண்டும் சௌதிக்கு திரும்பிய அவரது பேச்சு அங்கே இருக்கும் ஆடுகளுக்கு எப்படி தீனி போடுவார்கள். அங்கே கொய்யா எப்படி விளைவிக்கின்றார்கள். மௌன்ட் ரோடில் சில வருஷங்களுக்கு முன்பு இருந்த ட்ராபிக்.. கெட்டி பொம்மு பத்தின நாட்டுப் பாடல், 'வெல்லுவதற்காக கொல்லுதல் ' நடந்தது எனும் அந்த கால கலக நியாயம்'

பையன் பஞ்சர் பார்த்து சக்கரத்தைப் பொறுத்திக் கொண்டிருந்தான்

அவனுக்கு பணம் தந்து விட்டு கிளம்பும் முன்பு, 'உங்க பேர் என்னங்க'

"தாஜுதீன்'

'என்ன வேலை செய்றீங்க'

'நிரந்தரமா ஏதும் இல்லீங்க தம்பி.. இங்கே இருக்கும் எல்லா பிரியாணி ஓட்டலிலும் வேலை பார்ப்பேன்.. காசு தருவாங்க சோறு

போடுவாங்க.. ராத்திரியான பூம்புகார் வாசலிலே படுத்துக்குவேன். கால்ல நல்லா அடிபட்டிருக்கு ரொம்ப வலிக்குது. உங்க ஃபோன் நம்பர்

இருந்தா தாங்க தம்பி..

என்னுடைய பிசினஸ் கார்ட்டும் கொஞ்சம் பணமும் தந்தேன்

மறுத்துக் கொண்டே," உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். பணம் வேண்டாம்.. போன் செய்றேன். என்னை ஒருதரம் புக் ஃபேருக்கும்

லைப்ரரிக்கும் கூட்டிட்டுப் போக முடியுமா"

'அவசியம் செய்றேன். பணம் தந்ததை தப்பா நினைச்சுக்காதீங்க .. உங்களுக்கு 80 வயதிருக்கும் என நினைக்கிறேன். எங்கப்பா இறக்கும்

போது அந்த வயசு தான்.. உங்க பையன் தந்த மாதிரி நினைச்சிட்டு வாங்கிக்கங்க"

என் பிசினஸ் கார்டை பார்த்தவாறு என்னிடம் பேசினார்.. Your guess is wrong mowlee. I am just 62 years old... சரளமான ஆங்கிலத்தில்,

க்ளோபல் வார்மிங்.. ஏஜிங் என தொடந்தார்.

மனசில்லாமல் அங்கிருந்து சென்ட்ரல் போய் லேட்டாக வந்த ரயிலுக்கு காத்திருந்து... மகளை வரவேற்று, மனைவியுடன் ஆட்டோவில்
அனுப்பி வைத்து ஆபிஸ் போய் மிக முக்கியமான முடிவுகள் இரண்டு இன்றைக்கு எடுத்து.. வீடு திரும்பி இந்த நிமிஷம் வரை எனக்கு பிரமிப்பு அடங்கவில்லை.. அந்த பிரமிப்பை சொல்வதற்கு எனக்கு பிரமிப்பு என்ற வார்த்தை தவிர வேறு தெரியவில்லை