சனி, 10 டிசம்பர், 2016

வண்ணமும் வாசமும்

இந்த பூவுலகம் ஒரு பூங்காவாக
இருக்கிறது.

மனிதா்கள் மலா்களாக இருக்கிறாா்கள்.

ஒரு பூவைப் போலவே மனிதனும்
ஒரு விதையிலிருந்து வெளிப்படுகிறான்.

ஒரு பூவைப் போலவே மனிதனும்
கொடியில் உதிக்கிறான்; கொப்பூழ்க்
கொடியில்,

மனிதனின் வாழ்க்கையும் மலாின்
வாழ்க்கையாகவே இருக்கிறது,



ஒரு மலரைப் போலவே அவனும் ஏதோ
ஒரு தோட்டத்தில் தோன்றுகிறான்.

மலரைப் போலவே அரும்புகிறான்; மலா்கிறான்
மணம் வீசுகிறான்.

இறுதியில் மலரைப் போலவே வாடுகிறான்;
உதிா்கிறான்; மண்ணோடு மண்ணாகிவிடுகிறான்.

ஒவ்வொரு மலருக்கும் ஒரு வண்ணமுண்டு.
அதைப் போலவே ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு வண்ணமுண்டு.

மனிதன் தனக்கென ஒரு முகமும்
உடலும் கொண்டு பிறக்கிறான். இவையே
அவன் வண்ணமாக இருக்கின்றன்.

பூவின் வண்ணம் போலவேமனிதனின
முகமும் உடலும் புறக் கோலங்களாக
இருக்கின்றன.

வண்ணம் பூவின் அடையாளமாக
இருப்பதைப் போலவே மனிதனுக்கும்
அவன் முகம் அடையாளமாக இருக்கிறது.

ஆனால் உலகம் வண்ணத்தை வீடப்
பூவின் வாசத்திற்கே அதிக மதிப்பைத்
தருகிறது.

மனிதனுக்கும் வாசம் உண்டு விரும்பத்
தகுந்த அவனுடைய குணமும், செயல்களும்
அவனது வாசமாக இருக்கின்றன.

மலா் வண்ணம் மங்கி வாடி உதிா்வது
போன்றே மனிதனும் முதுமையில் வடிவம்
குலைந்து இறந்து போகிறான்.

மலாின் வாசம் காற்றோடு கலந்து மறைவது
போலவே அவனுடைய உயிரோடு குணமும்
சேயலகளும் காற்றோடு காற்றாய்க கலந்து
மறைந்துவிடுகின்றன.

வாசம் எங்தே போகிறதோ அங்கே
மனிதனும் போய் விடுகிறான்.

இந்தப் பூவுலகப் பூங்காவில்
பூவாகப் பிறப்பெடுத்தோம்
வண்ணமாகி வந்தோம்.
வாசமாகப் போய்விடுவோம்.
-ஆா்ஸுலக்னவி

நன்றி
அப்துல் ரகுமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக