சனி, 26 செப்டம்பர், 2015

Marketing Commitment





என்னுடைய பதிவை தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு வணக்கம்கவிதைகளை மட்டும் படித்துவந்த நீங்கள் இனி என்னுடைய கட்டுரைகளைதொடர்ந்து படிக்கலாம் (எல்லாம் விதி), சிறப்பாக அமைய உங்களின் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்,இனி

Commitment 
இதற்கான சரியான தமிழாக்கம் மாத விற்பனை வாக்குறுதி
ஒவ்வோரு மாதத்தின் முதல் நாலும் அந்த மாதம் செய்ய எடுக்கவேண்டிய வியாபாரத்தின் எண்ணிக்கையைவிற்பனை பிரதிநிதி கூறவேண்டும் அதைASMம் CSMமிடமும் CSM அதை தன்னுடைய மேல் அதிகாரியிடம் தேரிவிப்பாா்,விற்பனை பிரதிநிதிகள் கூறும் எண்ணிக்கை சில நேரங்களில் அந்தஆண்டுக்கான டாா்கேட்டாக கூட இருக்கும்இனி கதை அவர் புதிதாக சேர்ந்த விற்பனை பிரதிநிதிபுகழ்மிக்க கம்பேனியில் வேலைபார்த்தவர்,அதனால் ASMவிட சிறிது குறைவான சம்பலம் முதல் முன்று மாதங்கள் முட்டை யாரும் கேள்வி கேட்கவில்லைநான்காவது மாதம் மிக குறைந்தவிற்பனை ஐந்தாவது மாதம் எஸ்கேப் இதுதான் marketing. 



டீகடை bench:-   நமக்கு 1000 கம்பேனி மடியும் மச்சி


சனி, 7 பிப்ரவரி, 2015

காதலித்துப்பாா்



உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அா்த்தப்படும்

ராத்திாியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்

காதலித்துப் பாா்



#

தலையணை நனைப்பாய்

மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நமிஷமென்பாய்

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இநத உலகமே
உன்னைேய கவனிப்பதாய்
உணா்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்தப் பூக்கள்
எல்லாம்
காதலை கெளரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பாா்

#

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவாிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழக்கும்

ஹாா்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு
கண்ணீா்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பாா்

#

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா ?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா ?

உன்னையே உனக்குள்ளே
புதைக்க்த் தொியுமா ?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா ?

அத்வைதம்
அடைய வேண்டுமா ?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிா்தம் இருந்தும்
பட்டினி கிடந்து
பழகியதுண்டா ?

காதலித்துப் பாா்

#

சின்னச்சின்னப் பாிசுகளில்
சிலிா்க்க முடியுமே

அதற்காாவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அா்த்தங்கள் விளங்குமே

அதந்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காக வேனும்

காலித்துப்பாா்

#

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்

உறவுகள்
உயிா்பிழிந்தாலும்

விழித்துப் பாா்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப் பாா்

சொா்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப் பாா்

நன்றி
கவிப்பேரரசு வைரமுத்து

திங்கள், 26 ஜனவரி, 2015

கலித்தொகை இன்பம் (அக்கள்வன் மகன்)




தலைவி!  தோழியைப் பார்த்து! ஒளி செய்யும் வளையலை அணிந்தவளே! இந்தக் கதையைக் கேளடீ!

நாம் மாலை நேரத்தில் தெருவில் மணலால் சிறுவீடு அமைத்து மணல் சோறு சமைத்து விளையாடும்போது, ஒருவன் வந்து நம் மணல் வீட்டைக் காலால் சிதைத்தும் நம் தலையில் சூடி இருந்த பூச்சரங்களைப் பிய்த்துப் போட்டும், நாம் விளையாடிய பந்தினைப் பறித்துக் கொணடும் ஓடியும், நம்மையும் கதறுமாறு! செய்வானே! அந்தக் கட்டுக்கடங்காத பட்டியை உனக்கு நினைவு இருக்கிறாதா? என்று அவனைப் பற்றி நினைவுபடுத்தினாள் தலைவி!

ஆமாம்! தெரியுமே! நினைவு இல்லாமல் போகுமா? அவன் பொல்லாதவன் ஆயிற்றே! எத்தனை முறை நாம் கட்டிய மணல் வீட்டைக் காலால் கலைத்துள்ளான்! நாம் தலையில் சூடி இருந்த பூக்களைப் பறித்துப் பிய்த்தெறிந்துள்ளான். குறும்புக்காரன் அவனை எப்படி மறக்க முடியும்! அவன் பெரியவனான பிறகும் வழியில் நம்மைக் கண்டால் கண் சிமிட்டி, கேலியும் கிண்டலும் செய்வான். அவன் பார்வை பொல்லாத பார்வையாக இருக்குமே! அவன் உம்மைப் பார்த்தானா? எங்கு, எப்போது உம்மைப் பார்த்தான் சொல்லேண்டீ! என்றாள் தோழி.

ஆம்! அவன் ஒருநாள் என்ன செய்தான் தெரியுமா?

என்னடி! அவன் என்ன செய்தான்? சொன்னால் தானே தெரியும்! அவன் மிகக் குறும்புக்காரனாயிற்றே! சொல்லடி சீக்கிரம்! என்றாள் தோழி.

ஒருநாள் யானும் என் அன்னையும் வீடடினுள் இருந்தோம். அன்னை சமையல் செய்து கொண்டிருந்தாள். நான் அம்மாவுக்கு உதவியாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

ஒருவன் எங்கள் தெருவாயிற்படியில் நின்றுகொண்டு, வீட்டில் இருப்பவர்களே! கொஞ்சம் உண்ண நீர் வேண்டுகிறேன் என்று கூறினான். அதைக் கேட்ட என் தாய், என்னை அழைத்து, சுடர் இழையாய்! யாரோ ஒருவன் உண்ணும் நீா் கேட்கிறான். தகட்டுப் பொன்னால் செய்த கலயத்திலே உள்ள நீரைக் குவளையில் முகந்து சென்று அவனுக்கு வார்த்து வா என்று கூறினாள்.

நான் அவன்தான் வந்திருப்பவன் என்று அறியாமல் நீா் முகந்து கொண்டு போனேன்.

போனேனா !

என்னடி ! அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறாய் !

போனேன் ! அந்தக் குறும்புக்காரன் ! வளை குலுங்கும் என் முன்னங்கையைப் பற்றி வலித்தான். நான் நடுங்கிவிடடேன். நடுங்கியதும் குரல் எழுப்பி,

அன்னாய் ! இவன் செய்கின்ற காரியத்தை வந்து பார் அம்மா ! என்று கதறினேன்.

அந்தச் சத்தத்தைக் கேட்ட என் தாய் அலறி துடித்து ஓடி வந்தாள். அவன் அவர்களைப் பார்த்தான். பார்த்த உடன் நடுநடுங்கிப் போனான். நானும் அவன் நிலையைக் கண்டு துடித்துப்போனேன். அவன் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருந்தது. அவன் பார்வை எம்மிடம் கெஞ்சுவது போலும் பாவமாக இருந்தது. நான் நடந்ததை மறந்தேன்.

என் தாயைப் பாா்த்து அன்னாய் ! இவன் நீா் குடிக்கும்போது விக்கினான் என்றேன்.

அவனைப் பாா்த்து உண்மையறியாத என் தாயாா் உண்மையாகவே கலங்கிய உணர்வோடு அவன் முதுகைத் தடவிக்கொண்டே ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தாள்.

அப்பொழுது அவள் கடைக்கண்ணால் என்னைக் கொல்வது போலப் பார்த்து மீண்டும் தன் மன மகிழ்ச்சியைத் தரும் கூட்டத்தின் புன்சிரிப்பைத் தந்தான். பாரடீ ! அந்தக் கள்வன் ஆகிய மகன் ! என்றாள்.

கள்வன் ! இழிவுதரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பந்தரும் கள்ளயே போன்றது அவன் குறும்பு!

காதல், மலரைவிட மேன்மையுடையதாகும். அந்த உண்மை அறிந்து அந்த நல்ல பயனைப் பெறக் கூடியவர்கள் உலகத்தில் சிலரே ! கண்பார்வையின் அளவில் பிணங்கி, அவனை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, பிணங்கிய நிலையையும் மறந்து கடந்துவிட்டாய் !

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை. காமத்திற்குண்டு என்று தலைவியைப் பார்த்துத் தோழி கிண்டல் செய்தாள்.

கலித்தொகை செய்யுள்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லீரே!
உண்ணுநீர் வேட்டேன்’ என் வந்தாற்கு,
அன்னை

‘அடர்பொன்  சிரகத்தால் வாக்கிச் சுடர்இழாய்!
உண்ணுநீா் ஊட்டிவா’ என்றாள்; என், யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத், தெருமந் திட்டு
அன்னாய்! இவன்ஒருவன் செய்ததுகாண்!
  ன்றேனா,

அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்,
‘உண்ணுநீா் விக்கினான்’ என்றேனா அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ; மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி,
நகைக்கூட்டம்
செய்தான், அக்கள்வன் மகன் !

நன்றி

புலவா் செக. வீராசாமி