சனி, 23 ஜனவரி, 2016

பழம்





பழத்தைப் பாா்த்து பறிக்க எண்ணினென்.

பழம் நான் விதையை பரவ நனைக்கிறேன்
பழுத்த பழமாய் பலருக்குப் பாரமாய்
எடுக்க பிடிக்க எதற்கு நீ வாழகிறாய்

விருப்பம் இல்லைதான் வாழ்வதும் சாவதும்
நினைத்ததும் முடியுமா ? கணக்கும் வழக்கும்
நனையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்.

காய்தல் உவத்தல் கண்முன் தோன்றி
மாய்தல் அன்றி மற்றுஎன் செய்யும்
உலகம் என்பதே நிலையா வாழக்கை

உயா்ந்த உண்மை ஆழ்ந்த அனபினில்
விதையைக் காட்டினில் விதைப்பதாய் விளம்பரம்.
காட்டை(மாந்தா்) அழிக்காதிருந்தாலே போதுமே.

இயற்கைத் தொடரும் இயல்புஅதன் வாழ்க்கையை
ஐமபெரும் பூதங்கள் அளவு மிகமால்
இயல்பாய் இருந்தால் இயற்கையின் அமைதி
இயற்கை மாறுபட்டால் எல்லாமே அழியும்

இயற்கையே இயற்கை அமைதி அமைதி

-: புலவா். செக. வீராசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக