ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

சினேகிதனின் தாழ்வான வீடு


சினேகிதனின் தாழ்வான வீடு

கறுப்பேறிப்போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்தபிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.


காலேஐ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறல்,
பொன்மொழிகள்-
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் - என

எழுதியெழுதி அழிப்பான்
எழிதுவான்.


படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விள்ம்பரம் ஒட்டிய
வெட்டும்புலீ தீப்பெட்டியும்
உத்தீரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே
பத்திப்படுத்தி வந்த
தாத்தாவின் - பல
தலபுராணங்கள்
சிவஞான போதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவா் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில் - பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விள்க்கு மாடத்தில் அடைத்துபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.


முதல்பிள்ளையை
பெற்றெடுத்துப் பேனபின்
வரவே வராத அக்கா
வந்தால் -
தொட்டில் கட்ட
தோதுவாய் - அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள்.


……………..


நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று
சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து
இதில்
துாக்கு மாட்டித்தான
செத்துப் போனார்
சினேகிதனின்
அப்பா.


நன்றி
கலாப்ரியா

சனி, 12 ஏப்ரல், 2014

தூதுப் பெண்கள்

தோழா .....
எப்படி 
உன்னால்
சொல்ல முடிந்தது 
என்னிடம் ?

கல்லூரிப் பாடத்திலிருந்து 
காண்டம் ஜோக் 
வரையிலும் 
பகிர்ந்து கொண்டவன் நீ 

நம் 
பரஸ்பர ரசணை பற்றி 
பட்டியலிட பக்கங்கள் போதாது 

கல்லுரி வாசல் வ்ராவதியில் 
கால நேரமற்று 
பேசிக் கொண்டிருந்து 
பதறிப் பிரிந்த போதும் ...

கடற்கரையில் 
வீரல் கோர்த்து 
ஆலையில் நணைந்தபோது...

வேடிகையாய்   
என் கன்னத்தில் நீ 
வேகமற்றுத் தட்டிய  போதும் ...

புறங்கையில் 
பூப்போல 
நீ இட்ட முத்தத்தின் 
போதும் கூட 
நான் நீணைத்ததில்லை 

இப்படி 
சொல்லப்போகிறாய்   
என்று !

நிறைய 
தோழிகளின் காதலுக்கு 
பாலமாய்  இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான் ....

ஆனாலும் ...
நீயும் கூட 
உன் காதலைச் 
சுமந்து சென்று 
மற்றவரிடம் சேர்ப்பிக்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது ??
என்னிடம் ??

எப்போதும்...
தூதுப் பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை 
காதல் !!!!!!!!!!!! 


நன்றி 
உமா சம்பத் (குமுதம் )