ஞாயிறு, 10 நவம்பர், 2013

பூச்செடி



தன் மகள் லாவண்யா பற்றி கவிஞர் பழநிபாரதியின் கவிதை




பூச்செடி வளர்க்க முடியாத
எங்கள் சிறிய வீட்டில்
வளர்ந்து கொண்டிருக்கீறாள்
லாவண்யா,

இவள் சிரிப்பை
முழம்போட்டு
முடிந்துபோவாள்
எங்கள் வீட்டுப் பூக்காரம்மாள்,

இவள் மழலையில்
கனிந்து நிற்பாள்
பழக்காரம்மாள்,

எங்களோடு
நண்கர்களோடு
எதிர்வீட்டுத்
தென்னை அணில்களோடு
ஐன்னல் குருவியோடு
மதியம்
இரண்டு மணி காக்கைகளோடு
பழகிப் பழகிப்
பூக்கிறது
எங்கள் பூச்செடி

இந்த செடியை வளர்ப்பது
சுலபமாக இருக்கிறது,

பூக்களைப்
பத்திரப்படுத்துவதுதான்
எப்படியென்று
தெரியவில்லை.

நன்றி     பழநிபாரதியின்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

காயாத்ரி மந்திரம்



காயத்ரி பற்றி
கவிதை எழுதலாம்
எனில்
கவிதை வேறு
கவிதை வேறா

காயத்ரிகள்
அழகாய்த்தான் இருக்கிறார்கள்
அழகாய் இருப்பவரெல்லாம்
காயத்ரிகளாய் இருந்திருக்கக்
கூடாதா

கால் கொலுசு
கண்ணாடி வளையல்
மல்லிகைப் பூ
மஞ்சள் தாவணி
இவை எவையும் இல்லாமல்
அழகாய் இருக்க
காயத்ரிக்கே சாத்யம்

பெரும்பாலும்
காயத்ரிகள்
காதலுக்கெட்டாத துரத்தில்
சிரிக்கிறார்கள்
எல்லாம் தெரிந்த
காயத்ரிகலளுக்கு
கொஞ்சம்
வெட்கப்பவும் தெரிந்திருக்கலாம்

காயத்ரிக்கும்
காயத்ரிக்கும் நடக்கிற போட்டியில்
காயத்ரிகளே ஜெயிக்கிறார்கள்

காயத்ரியைப் பிடிக்கும் என்பதற்கு
கண்ணம்மாவை
பிடிக்காகது என்பதல்ல பொருள்

காயத்ரிகள் காயத்ரிகள்தான்
கல்யாணத்துக்கு
முன்னும் பின்னும்

காயத்ரிக்குத்தான் தெரியும்

காயத்ரியாய் இருப்பதன் கஷ்டம்.        


நன்றி   கவிதா பாரதி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கருமியின் பணப் பெட்டி

ஆசைப் படுவதை அடைவதற்கான
போராட்டம்தான் மனித சரித்திரம் .

மனிதப் படகுக்கு ஆசைகளே துடுப்புகளாக
ஏறுகின்றன.

ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு ஆசை.

ஒருவன் பெண்ணை விரும்புகிறான். ஒருவன்
மண்ணை விரும்புகிறான்

ஒருவன் பதவியை விரும்புகிறான். ஒருவன்
ஒருவன்பணத்தை விரும்புகிறான்.

ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு
விதமான ஆசை

குழந்தைப் பருவத்தில் பொம்மைகளை
விரும்புகிறான்.

வயதான பிறகு உயிருடைய பொம்மைகளை
விரும்புகிறான்.

எப்படியோ மனிதனுக்கு ஒவ்வொரு
பருவத்திலும் விளையாடுவதற்கு ஏதாவது
வேண்டும்,

ஆசையில்லாத மனிதனே இல்லை,

ஆசைகளைத் துறக்க வேணடும்
என்பவனும் மோட்சத்தை விரும்ப௸கிறான்

ஆனால் மனிதன் கேட்பதெல்லாம்
அவனுக்கு கிடைத்துவிவதில்லை.

ஏன் கிடைப்பதில்லை,

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம்
சொல்லுகிறார்கள்
‘ந௸ விரும்பினால் போதாகது, இறைவனும்
விரும்ப வேண்டும்’ என்கின்றனர் சிலர்
‘விதியில் இருந்தால்தான் கிடைக்கும்’
என்கின்றனர் சிலர்,

‘ஆசைப்படுவதைஅடைவதற்கு வேண்டிய
முயற்சியை நி செய்யவில்லை’ என்கின்றனர்
சிலர்

‘உன்ஆசை உன் சக்திக்கு மிறியது,
அதனால்தான் கிடைக்கவில்லை’ என்கின்றனர்
சிலர்

மனிதன் கேட்பதற்குக் கவிஞர் ஃகததில் ஷஃபாயி
ஒரு சஶவையான காரணம் கூறுகிறார்

இந்த வாழ்க்கையிடமிருந்து
உனக்கு எதுவ௸ம் கிடைக்கப் போவதில்லை
இது ஒரு கருமியின்
பணப் பெட்டி,

நன்றி

அப்துல் ரகுமான்

பாக்யா