புதன், 26 செப்டம்பர், 2012

பின் குறிப்புகள்

1) மனசு மனசு தேடும்
     உடம்பு உடம்பு தேடும்

2) சிவனுக்கும் வேண்டும்
     உபயதாரர்

3) இத்தனை பூனைகளுக்கி டயலும்
     எலிகள் வழவிலலையா   ?

4) ஒரு முறைதான் பூக்கும்
     என்பதல்ல
     ஒவ்வொரு  முறையும் பூக்கும்

5) நான் பேச யாருமில்லை
     நட்சத்திரங்களைத் தவிர

6) அறியாமையில்
     தினங்கள் கழியும்
     அறியும் தருணம்
     ஆயுள் முடியும்

7)  ஒன்றுல்போல்தான் உள்ளன
     உப்பும்
    கற்பூரமும்  

8) எரியாமல் இருப்பதால்
     எனக்குள் நெருப்பில்லை
     என்றா நினைக்கிறாய்

நன்றி -- இளையபாரதி

   

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஐக்கூ

இருக்கலாம் 
பலருக்கு 
இசையென்பது 
பிணததோல்களின் இரைச்சலாய்..  
ஆனால் 
எனக்கோ 
குருவிகளின் 
சிறிய தொண்டைகளிருந்து

2)   சொல்லிக் கொள்கிற மாதிரி 
அழகானதாயில்லை 
சந்தன மரங்கள் 

3)  திறந்த வாயீற்படியில்  
ஒரு முகம் தோன்றி 
ஏதேனும் உரைக்கட்டும்   
கவலையில்லை ....
பார்க்கும்போது 
பூட்டில்லாமலிருத்தல் வேண்டும்  

4)  சறுக்குப் பாறையில்
டிரவுசர் கிழிய 
புட்டம் தேய்த்து விளையாடுகிற 
குழந்தை அறியுமோ  
அப்பாவின் வறுமையை 

5)  அவளை அணைக்க முடியவில்லை 
மனசுக்குள் நளிகின்றன...
புடவையாய் இறந்த பட்டுப்புழுக்கள் 

6)  யாரேனும் 
பகிர்ந்துகொள்ள   முடியுமா 
மரணத்தை?

நன்றி -- இ ரா . இலட்சுமணன்