புதன், 10 டிசம்பர், 2014

குயில் தோப்பு : காதலித்துக் கெட்டுப்போ

குயில் தோப்பு : காதலித்துக் கெட்டுப்போ

காதலித்துக் கெட்டுப்போ



அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மு௸ளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
தம்பிகள் தேடிப்போ
துாதுக்குத் தயாா்செய்
தத்துவங்கள் கேட்காதே
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனானாலும் நகா்ந்து செல்
கடிதமெழுதக் கற்றுக்கொல்
பின்தொடா்ந்து பல் இளி
பொறுக்கி என்பாள் பொறு
செருப்படிகள் கணக்கெடு
விழி ஆற்றில் விழு
பூப்பறித்துக் கொடு
மேகமென கலை
மோகம் வளா்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணா்
தாடி வளா்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊா் எதிா்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்லச் செத்து மீண்டு வா
திகட்டத் திகட்டக் காதலி

நன்றி   நா.முத்துக்குமாா்

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

படிங்கடா, டீ குடிக்காம படிங்கடா





பாதி ராத்திரியில் பாதம்பால்
குடிக்கறான்
‘திங்’ பண்றேன்னுட்டு
‘தம்’ மடிக்கறான்
குருப் ஸ்டடின்னு சொல்லிக்கிட்டு
மொட்டைமாடியில கும்மாளமடிக்கிறான்
கொஸ்டின் பேப்பா் ‘அவுட்’ன்னு
கொல்லைக்கும் வாசலுக்கும்
‘டவுட்’ல அலையறான்
ஷேவ் பண்ணிக்காம
செம்மறியாடுபோல திாியறான்
ஃபிகா் வீடடைத் தேடிப்போய்
‘படம் பாா்த்து பத்து நாளாச்சு’ன்னு
பிலாஸபி பேசறான்
பக்கத்துக்கு தாண்டா மாா்க்கு’ன்னு
சுப்பிரமணிய சுவாமிபோல சவால் விடறான்
அப்பன் வேட்டிய கட்டிக்கிட்டு
அய்யனாா் கோயில் போறான்
ஹாஸ்டல் பசங்களோட உட்காா்ந்து
முஸ்தாபா பாடி மெழுகுவா்த்தி ஆட்றான்
அழுதுகிட்டே ஆட்டோகிராஃப் வாங்கறான்

படிக்க வேண்டிய காலத்துல
பாசில் படம் பாா்த்துப்புட்டு
பாிட்சை நேரத்துல
பல்லை குத்தலாமாடா?
பரவாயில்லை படி…...
ஃபிகரையும், பிஹாரையும் மறந்துப்புட்டு
பாய் கடையில டீ குடிக்காம படி !
நாற்பது மாா்க கிடைக்குமடா  !

நன்றி
குமுதம்

ஞாயிறு, 13 ஜூலை, 2014

பொய்யோ ? மெய்யோ ? பாரதியாா்

பொய்யோ ? மெய்யோ ?  --- மகாகவி பாரதியாா்




எல்லா சாஸ்திரங்களும் ஏற்க்குறைய உண்மைதான் ஆனால், எல்லாருக்கும், எப்போதும், ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. சின்ன திருஷ்டாந்தம் சொல்லுகிறேன்

ஒரு செல்வா், கிழவனாா் ஒருவேளை ஆஹாரம் செய்துகொண்டு, லெளகிக விஷயங்களைத் தான் கவனியாமல், பிள்ளைகள் கையிலே கொடுத்துவிட்டு, நியம வஷ்டைகள் ஜப தபங்களுடன் சுந்தர காண்டத்தையும் கடோபநிஷத்தையும், பாராயணம் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறாம விருப்பதே மேலான வழியென்ற கொள்கை இந்தக் கழவனாருக்குச் சாிப்பட்டு வரும்.

ஒரு 16 வயது ஏழைப்பிள்ளை, தகப்பனில்லை, வீட்டிலே தாயாருக்கும் தங்கைக்கும் தன்ககுமாக எங்கேனைம் போய் நாலுபணம் கொண்டுவந்தால் தான் அன்றன்று அடுப்பு முட்டலாம். இவன் மேற்படி சுந்தரகான்டவழியை போய்ப் பிடித்தால் நியாயமாகுமா ?

‘இந்த உலகமே பொய்’ என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கிவருகிறது. ஸந்யாஸிகள் இதை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கட்டும். அதைப்பற்றி, இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்தி லிருப்போருக்கு அந்த வாா்த்தை பொருந்துமா? நடுவீடடில் உச்சாிக்கலாமா? அவச்சொல்லன்றே? நமக்குத் கந்தை வைத்து விட்டுப்போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோலே நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீா்விட்டுக் கரைந்தாள் நமது மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூாித்தாள் நமது மகிழ்ச்சியின்போதெல்லாம் உடல் பூாித்தாள் நமது குழந்தைகளை வளா்த்தாள் அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானை? பெற்றவாிடம்  கேட்கிறேன். குழந்தைகள் பொய்யா? நமது விட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?

வீடுகட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தத்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்கவேண்டும், எல்லா தெய்வங்களும் ஒன்று, அறம், பொருள், இன்பம் என்ற முன்றிலும் தெய்வஒளி காணவேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானே கிடைக்கும்.

உலகத்தை நோக்கி வினவுதல்

1. நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நங்களெல்லாம்
  சொற்பனநாதானா? --  பலதொற்ற மயக்கங்களோ?
  கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
  அற்ப மாயைகளோ? --  உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?

2. வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
  கானலினீரோ ? -- வெறுங் காட்சிப் பிழைதானோ ?
  போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிநதே போனதனால்
  நானுமோா் கனவோ ? --  இந்த ஞாலமும் பொய்தானோ ?

3. காலமென்றே யொருநினைவுங் காட்சியென்றெ பலநினைவும்
  கோலமும் பொய்களோ ? -- அங்குக் குணங்களும் பொய்களோ ? சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோா்  விதையிலென்றால்
  சோலை பொய்யாமோ ? -- இதைச் சொல்லொடு சோ்ப்பாரோ ?

4. காண்பவெல்லா மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
  வீண்படு பொய்யிலே -- நித்தம் விதிதொடா்ந் தடுமோ ?
  காண்பதுவே யுறுதிகண்டோம், காண்பதல்லா லுறுதியில்லை
  காண்பது சக்தியாம் -- இந்தக் காட்சி நித்தியமாம்.

(பின்னுரை  -- முதற் பாட்டிலே, ‘நிற்பது’, ‘நடப்பது’, முதலியன உலகத்தில் தோன்றும் வடிவங்கள் ‘கற்பது’, ‘கேட்பது’ முதலியன செய்கைகள். முன்றாம் பாட்டிலே ‘கோலமும் பொய்களோ, அங்குக் குணங்களும் பொய்களோ’  என்பது, தெளிவாகச் சொன்னால், ‘தேளின் உருவம் மாத்திரம் பொய்யோ ? அது கொட்டுவதும் பொய்தானோ ? என்ற கேள்வி.)

ஞாயிறு, 8 ஜூன், 2014

சத்திரத்தின் முகவரி


மரணத்தைக் கண்டு எல்லோரும்
அஞ்சுகிறாா்கள்.

மரணம் பற்றித் தொிந்திருந்தால்
இப்படி அஞ்சமாட்டாா்கள்.

அறியாமையே அச்சத்தின் ஆதாரம்.

செத்தால்தான் சுடுகாடு தொியும்
என்பாா்கள் இது தவறான கருத்து,

செத்தவன் எதையும் தொிந்துகொள்ள
முடியாது.

எதையும் தொிந்துகொள்வதற்கான
அறிவோ உணா்வோ அவனிடம் இருக்காது.

வாழ்பவன்தான் சுடுகாட்டைத் தொிந்து
கொள்ள முடியும்.

சாவைப் பற்றியும் செத்தவன் தொிந்து
கொள்ள முடியாது.

உயிரோடிருப்பவன்தான் சாவைப் பற்றி
அறிய முடியும்.

மரணம் என்றால் என்ன என்பதை
வாழ்க்கையிலிருந்துதான் தொிந்துகொள்ள
முடியும்.

அதாவது வாழ்ககையை அறிந்தவன் தான
மரணத்தையும் அறிவான்.
மரணம் என்றால் என்னவென்று புாியவிலை
என்று ஒருவன் சொல்கிறான்
என்றால் அவனுக்கு வாழ்க்கையும்
புாியவில்லை என்று பொருள்.

வாழ்வாங்கு வாழ்கின்றவனே
வாழ்க்கையை அறிவான். அவனுக்கே
மரணம் இன்னதெனத் தொியும்.

மரணத்தை அறிந்தவன் மரணத்திற்கு
அஞ்ச மாட்டான்.

வாழ்த் தொியாமல் வாழ்கிறவா்களே
மரணத்தைக் கண்டு அஞ்சுகிறாா்கள்,

அறிந்ததில் அச்சம் உண்டாகாது.
உயிா் ஒரு பயணி.

அதன் பயண வழியில் வாழ்க்கையும்
ஒரு கத்திரம், மரணமும் ஒரு சத்திரம்.

கவிஞா் தாஃ சொல்கிறாா்.

மரணததைப் பற்றிய உண்மையை
வாழ்கிறவா்களிடம் கேள்
பயணிக்கு ஒரு சத்திரத்தின் முகவாி
மற்றொரு சத்திரத்தில் கிடைக்கிறது

=நன்றி

அப்துல் ரகுமான்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

சினேகிதனின் தாழ்வான வீடு


சினேகிதனின் தாழ்வான வீடு

கறுப்பேறிப்போன
உத்திரம்,
வீட்டின் வளர்ந்தபிள்ளைகளுக்கு
கையெட்டும் உயரத்தில்.


காலேஐ் படிக்கும் அண்ணன்
அதில் அவ்வப்போது
திருக்குறல்,
பொன்மொழிகள்-
சினிமாப் பாட்டின்
நல்லவரிகள் - என

எழுதியெழுதி அழிப்பான்
எழிதுவான்.


படிப்பை நிறுத்திவிட்டு
பழையபேட்டை மில்லில்
வேலை பார்க்கும் அண்ணன்
பாஸிங்ஷோ சிகரெட்டும்
தலைகொடுத்தான் தம்பி
விள்ம்பரம் ஒட்டிய
வெட்டும்புலீ தீப்பெட்டியும்
உத்தீரத்தின்
கடைசி இடைவெளியில்
(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே
பத்திப்படுத்தி வந்த
தாத்தாவின் - பல
தலபுராணங்கள்
சிவஞான போதம்
கைவல்ய நவநீதம்
சைவக்குரவா் சரித்திரங்கள்
பலவற்றை,
வெள்ளையடிக்கச் சொன்ன
எரிச்சலில் - பெரிய அண்ணன்
வீசி எறியப் போனான்.
கெஞ்சி வாங்கி
விள்க்கு மாடத்தில் அடைத்துபோக
உத்திர இடைவெளிகளில்
ஒன்றில் தவிர
அனைத்திலும்
அடைத்து வைத்திருப்பாள்
அவன் அம்மா.


முதல்பிள்ளையை
பெற்றெடுத்துப் பேனபின்
வரவே வராத அக்கா
வந்தால் -
தொட்டில் கட்ட
தோதுவாய் - அதை
விட்டு வைத்திருப்பதாயும்
கூறுவாள்.


……………..


நின்றால் எட்டிவிடும்
உயரம்
என்று
சம்மணமிட்டு
காலைக் கயிற்றால் பிணைத்து
இதில்
துாக்கு மாட்டித்தான
செத்துப் போனார்
சினேகிதனின்
அப்பா.


நன்றி
கலாப்ரியா

சனி, 12 ஏப்ரல், 2014

தூதுப் பெண்கள்

தோழா .....
எப்படி 
உன்னால்
சொல்ல முடிந்தது 
என்னிடம் ?

கல்லூரிப் பாடத்திலிருந்து 
காண்டம் ஜோக் 
வரையிலும் 
பகிர்ந்து கொண்டவன் நீ 

நம் 
பரஸ்பர ரசணை பற்றி 
பட்டியலிட பக்கங்கள் போதாது 

கல்லுரி வாசல் வ்ராவதியில் 
கால நேரமற்று 
பேசிக் கொண்டிருந்து 
பதறிப் பிரிந்த போதும் ...

கடற்கரையில் 
வீரல் கோர்த்து 
ஆலையில் நணைந்தபோது...

வேடிகையாய்   
என் கன்னத்தில் நீ 
வேகமற்றுத் தட்டிய  போதும் ...

புறங்கையில் 
பூப்போல 
நீ இட்ட முத்தத்தின் 
போதும் கூட 
நான் நீணைத்ததில்லை 

இப்படி 
சொல்லப்போகிறாய்   
என்று !

நிறைய 
தோழிகளின் காதலுக்கு 
பாலமாய்  இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான் ....

ஆனாலும் ...
நீயும் கூட 
உன் காதலைச் 
சுமந்து சென்று 
மற்றவரிடம் சேர்ப்பிக்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது ??
என்னிடம் ??

எப்போதும்...
தூதுப் பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை 
காதல் !!!!!!!!!!!! 


நன்றி 
உமா சம்பத் (குமுதம் )